ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சினோவேக் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசியாக பைசர் செலுத்தப்படும்

கோலாலம்பூர், அக் 22- சினோவேக் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பெரியவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசியாக சைபர் பயோஎன்டெக் தடுப்பூசியை செலுத்தும் பணி இன்று தொடங்கி மேற்கொள்ளப்படும்.

சினோவேக் தடுப்பூசியைப் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த ஊக்கத் தடுப்பூசி சம்பந்தப்பட்டவர்களுக்குச் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்குக பன்முகத் தன்மை அடிப்படையில் இந்த ஊக்கத் தடுப்பூசியை வழங்கும் பணி இன்று தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி மீதான நிபுணர்கள் ஆலோசக குழு வழங்கிய பரிந்துரையின் பேரில் முதல் கட்டமாக இந்த ஊக்கத் தடுப்பூசி 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசியை வழங்கும் இந்நடவடிக்கை ஆய்வுக்குள் நடத்தப்படும் உப ஆய்வாகவும் ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய கடுமையான விளைவுகள் மீது நடத்தப்ப்படும் ஆய்வாகவும் விளங்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஊக்கத்தடுப்பூசியைப் வழங்கும் பணி தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சுய விருப்பத்தின் அடிப்படையில் இலவசமாக மேற்கொள்ளப்படும் மேற்கொள்ளப்படும். நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள் மத்தியில் கூடுதல்பட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

ஊக்கத் தடுப்பூசி பெறத் தகுதியுள்ளவர்களுக்கு மைசெஜாத்ரா செயலி வாயிலாகவும் அச்செயலி வசதி இல்லாதவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட அவர்களின் தொலைபேசி எண்களில் குறுஞ்செய்தி வாயிலாகவும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தகவல் தரப்படும் என அவர் சொன்னார்.


Pengarang :