ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வாழ்க்கைச் சுமையைக் குறைக்க லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், அக் 22- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்கள் சிலாங்கூர் அரசின் உணவுக் கூடைத் திட்டத்தின் வழி பலனடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கவும் அவர்களுக்க்கான உணவு விநியோகம் துண்டிக்கப்படுவதை தவிர்க்கவும் இந்த உணவுக் கூடைத் திட்டம் உதவியது என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பீடித்த இரு இரண்டு ஆண்டு காலத்தில் சிலாங்கூர் அரசாங்கம் நான்கு பொருளாதார மீட்சித் திட்டங்கள் வாயிலாக 110 கோடி வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் 91,000 குடும்பங்களுக்கு  சிலாங்கூர் அரசின் செலவில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளதை  மாநில திட்டமிடல் பிரிவின் அறிக்கை காட்டுகிறது.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மேலும் 47,000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கி உதவியுள்ளோம். இது பொருளாதார திட்டமிடல் பிரிவின் அறிக்கையில் இன்னும் இடம் பெறவில்லை என்றார் அவர்.

முன்களப் பணியாளர்கள், வணிகர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் 12 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்பில் சிலாங்கூர் பரிவு பொருளாதார மீட்சித் திட்டத்தை மாநில அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பி.கே.பி. 2.0 அமலாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 7 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இரண்டாம் கட்ட உதவித் திட்டம் கடந்த 2020 ஏப்ரல்  முதல் தேதி அறிவிக்கப்பட்டது.

இது தவிர, குறைந்த வருமானம் பெறுவோர், மாணவர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள், சுற்றுலா துறையினர் ஆகியோருக்கு உதவும் வகையில் 55 கோடியே 16 லட்சம் வெள்ளி மதிப்பிலான மற்றொரு உதவித் தொகுப்பும்  வெளியிட்டப்பட்டது.


Pengarang :