ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் மலாவாத்தி தொகுதியில்  இன்று மோட்டார் சைக்கிள்களுக்கு மசகு எண்ணெய் மாற்றும் சேவை

ஷா ஆலாம், அக்  23 – இன்று  தொடங்கி இரண்டு நாட்கள்  நடைபெறும்லெட்ஸ் ரைட் அண்ட் ஹெல்ப்“ (லெட்ஸ் கோ) எனும் திட்டத்தின் மூலம் புக்கிட் மலாவாத்தியைச் சேர்ந்த சுமார் 200 மோட்டார் சைக்கிளோட்டிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூன் சியூ ஹோண்டா சென். பெர்ஹாட்  நிறுவனத்துடன் நடத்தப்படும் இத்திட்டத்தில் மசகு எண்ணெய், பொறிச் செருகி மற்றும் மோட்டார் சைக்கிளின் பேட்டரி ஆகியவற்றை மாற்றித்தரும் சேவையும்  வழங்கப்படுவதாக தன்னார்வலர் அமைப்பான  டீம் சிலாங்கூர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த இலவச சேவையில்  ஹோண்டா மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் 100 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  அவர்களைத் தொடர்ந்து பி40  எனப்படும்  குறைந்த  வருமானம்  பெறும்  பிரிவைச் சேர்த்தவர்கள் மற்றும் உணவு மற்றும் பொருட்கள் விநியோகிப்பாளர்கள் பயன்டுத்தும் மோட்டார் சைக்கிள்களுக்கு  வாய்ப்பு வழங்கப்படும்.  

இத்திட்டம் மோட்டார்சைக்கிளைக் கொண்டு வருமானம் ஈட்டுவோருக்கு, குறிப்பாக இணைய வழி விநியோக தொழில் செய்யும் மோட்டாரோட்டிகளுக்கு பெரிதும் உதவும் என  நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அந்த  தன்னார்வலர்  அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறியது.

இந்த “லெட்ஸ் கோ“  திட்டத்தை  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி புசாரின் அரசியல் செயலாளருமான  ஜூவாரியா ஸுல்கிப்லி  நாளை ம் ஞாயிற்றுக்கிழமை டத்தாரான் மலாவாத்தியில் தொடக்கி வைக்கிறார்.

அதே திட்டத்தில், டீம் சிலாங்கூர் புக்கிட் மலாவாத்தி, ஈஜோக், ஜெராம், பெர்மாத்தாங், செகின்சான் மற்றும் சுங்கை பஞ்சாங் ஆகிய இடங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சுமார் 600 உணவுக்கூடை விநியோகிக்கவுள்ளது.  

லெட்ஸ் கோ ஜின் சாலி ஏற்பாட்டில் செனாம்ரோபிக் மற்றும் ஜீம் அஹமட் ஏற்பாட்டில் அதிர்ஷ்ட்ட குழுக்கல், கரோக்கே போட்டி, காற்பந்து போட்டி மற்றும் பாரம்பரிய மலாய் சமையல் வகுப்பு போன்ற சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகளைச் சுமார் 100 தன்னார்வலர்களின் துணையுடன் லெட்ஸ் கோ ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :