ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளியை முன்னிட்டு 11 பொருள்களுக்கு  விலைக் கட்டுப்பாடு

புத்ரா ஜெயா, அக் 27- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 பொருள்களுக்கு உச்ச வரம்பு விலைக்கட்டுப்பாட்டை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர்  விவாகர அமைச்சு விதித்துள்ளது.

உயிர் கோழிகள், கோழி, இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, ஏ.பி.மற்றும் சி ரக கோழி முட்டை, சிவப்பு மிளகாய், தக்காளி, தேங்காய், தேங்காய் துருவல் ஆகியவையே விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களாகும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

பொருள்களின் விலை மற்றும் விநியோகத்தை நிலைப்படுத்துவதற்காக இப்பொருள்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கான பொருள் விலைக்கட்டுப்பாடு தொடர்பில் இயங்கலை வாயிலாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விலைக்கட்டுப்பாடு தீபகற்ப மலேசியாவில் உள்ள 91 மாவட்டங்கள் மற்றும் சபா சரவா, கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார்.

பெருநாள் காலத்தின் போது உணவுப் பொருள் விநியோகம் போதுமானதாகவும்  விலை நியாமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சுடன் தாங்கள் ஒத்துழைப்பை நல்கவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :