I
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நவம்பர் 4 ஆம் தேதி முதல் கடல் பெருக்கு- விழிப்புடன் இருக்க மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், நவ 2- இம்மாதம் 4 முதல் 9 ஆம் தேதி வரை ஏற்படக்கூடிய கடல் பெருக்கை கருத்தில் கொண்டு கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிப்பாளர்களும் வருகையாளர்களும் விழிப்புடன் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பரந்த நீர்ப்பரப்பு உள்ள பகுதிகளில் மிகவும் எச்சரிக்கை போக்குடன் இருக்கும் அதே வேளையில் வானிலை நிலவரத்தையும் கண்காணித்து வர வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளான், கோல லங்காட், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கடல் பெருக்கும் ஏற்படும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இந்த கடல் பெருக்கு அபாயத்தை கருத்தில் கொண்டு கடலோரங்களில் வசிப்போரும் வருகையாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அமிருடின் தெரிவித்தார்.

சிலாங்கூர் தவிர்த்து, கெடா, பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் கனத்த மழை, பலத்த காற்று மற்றும் பேரலை ஒரே சமயத்தில் ஏற்படும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :