B
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 5,071 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், நவ 4-        நாட்டில் நேற்று 5,071 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை  5,291 ஆக இருந்தது.

புதிய சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 86 ஆயிரத்து 630 பேராக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 5,216 பேர் அல்லது 98.6 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பிலுள்ள நோயாளிகளாவர். மீதமுள்ளவர்கள் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பில் உள்ளனர்.

நேற்று பதிவான 5,291 சம்பவங்களில் ஏழு இறக்குமதி இறக்குமதியானவையாகும். மீதமுள்ளவை உள்ளூரில் பதிவானவை.

545 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில்  286 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்று அவர்  அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜோகூர் மற்றும் சபாவில் தலா இரண்டு தொற்று மையங்களும் பேராக், பகாங் மற்றும் கோலாலம்பூரில் ஒரு  தொற்று மையமும் அடையாளம் காணப்பட்டன.

மலேசியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமை மற்றும் பரவல் பற்றிய  விரிவான தகவல்களை
 CovidNow இணையதளத்தில் https://covidnow.moh.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Pengarang :