ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநில தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டம் வணிகர்களை உயர்த்துகிறது

பந்திங் நவம்பர் 6 ; தீபாவளி கொண்டாட்டத்தின் கலகலப்பு இந்திய சமூகத்தை உற்சாகப்படுத்துவது உறுதி, மேலும் கடந்த ஆண்டை விட இந்த முறை பண்டிகை மிகவும் நேர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) அல்லது சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வணிக முன்னேற்றத்தை அனுபவிக்கும் தொழில் முனைவோர் நிச்சயமாக மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

பத்திரிக்கையாளர் நஸ்லி இப்ராஹிம் இந்த திட்டத்தில் இருந்து பயனடைவதற்கு முன் ஐந்து தொழில்முனைவோரின் ஏற்ற தாழ்வுகளை ஆராய்ந்தார். அதில் ஒருவர்,

வாடிக்கையாளரின் காரைக் கழுவி முடிக்க ரஷ்வின் ராம செல்வன் மூச்சுத் திணறினார். ஒன்றின் பின் மற்றொரு கார் வந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத இயல்பு.

இருப்பினும், ஸ்ப்ரே உபகரணங்கள் மற்றும் நீர் பம்ப் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை சலவை செய்யும் கருவிகளை வைத்திருப்பதால், பல கார்களை கழுவும் திறன் நன்கு அதிகரித்துள்ளது. வேலைகளை இன்னும் அதிக வேகமாக செய்ய இயலுகிறது.

அவரது கடைக்கு தினமும் குறைந்தது டஜன் கணக்கான கார்கள் வருகின்றன. தாமன் ஸ்ரீ புத்ரா, பந்திங், கோலா லங்காட்டில் 2019 இல் தொடங்கப்பட்ட இந்த சேவை, உள்ளூர்வாசிகள் தங்கள் வாகனங்களை சுத்தம் செய்வதை எளிதாக்கியது.

26 வயதான ரஷ்வினால் மேலும் கார் இருக்கைகள் சலவை சுத்தம், (போலிசிங்) பளபளப்பாக்குவது போன்ற சேவைகளையும் வேகமாக செய்ய முடிகிறது.

தான், சித்தம் திட்டத்தின் மூலம் கார் கழுவும் சேவையை மேம்படுத்தும் உபகரணங்களை பெற முடிந்தது. இவைகளை சொந்தமாக வாங்க பெரிய பணம் தேவை. அந்த பணத்தை திரட்ட நிறைய காலம் எடுக்கும்.ஆனால், சித்தம் உதவித் திட்டத்தினால் உடனடியாக தன் தொழிலை மேம்படுத்த முடிந்தது.

இது அவரது சேவையின் செயல்திறனை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிப்பதுடன், கூடுதலான வாடிக்கையாளர்களின்  வருகைக்கும், வியாபாரம் 20 முதல் 30 விழுக்காடு வரை  மேம்பாடு காணவும்  உதவியுள்ளது.

“சித்தத்தின் இந்த உதவி மிக முக்கியமானது சரியான நேரத்தில் கிடைத்த ஒன்று என்று ரஷ்வின் சிலாங்கோர்கினியிடம் கூறினார். நாட்டில் எல்லோருக்கும் இப்பொழுது சிக்கலான சூழ்நிலை,  இருப்பினும் இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாட்ட, சித்தத்தின் உதவித் திட்டம் தன் குடும்பத்திற்கு பெரிய துணையாக இருந்ததாக கூறினார்.

இந்த ஆண்டு குடும்ப தீபாவளிக்கான செலவுகளை ஈடுகட்ட தனது வருமானமே  பெரிதும் உதவியுள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக 26 வயதே நிரம்பிய  ரஷ்வின்  கூறினார்.


Pengarang :