ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய சமுதாயம் ஏற்றம் காண வேண்டும்.

ஷா ஆலம் நவம்பர்  6 ;  மாநிலத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்தியர்கள் உட்பட அனைத்து  மக்களும் அவர்களின் வளர்ச்சியை உறுதிசெய்ய உதவும் வகையில் பல்வேறு கொள்கைகளை சிலாங்கூர் அறிமுகப்படுத்தி வருகிறது.

சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு முன்முயற்சி (சித்தம்) மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (I-Seed) ஆகியவை இந்தியர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்கள். அதை தவிர்த்து தமிழ் தேசிய வகைப் பள்ளிகளுக்கு (SJKT), வழிபாட்டு இல்லங்களுக்கான உதவும் திட்டங்களும் உண்டு.

பத்திரிக்கையாளர் AMIN RIDZUAN ISHAK, இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து செந்தோசா மாநில சட்டமன்ற உறுப்பினரும், டத்தோ மந்திரி புசாரின், சமூக உறவுகளின் (இந்தியா) ஒருங்கிணைப்பாளருமாகிய டாக்டர் ஜி குணராஜாவிடம் பேட்டி கண்டார். 2018 இல் டத்தோ ‘ஸ்ரீ அமிருடின் ஷாரி டத்தோ’ மந்திரி புசார் ஆனதிலிருந்து இந்திய மக்களின் மேம்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்றார்.

இந்திய சமூகத்திற்கு சிலாங்கூரில் சிறப்பு உதவி இருப்பதால் பல நன்மைகள் உள்ளன. அதே நேரத்தில் வெளிப்படையாக வழிவகை செய்யப்பட்ட உதவிக்கு விண்ணப்பிக்கலாம். இனத்தின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்த சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு (சித்தம்) மிகவும் பயனுள்ள முயற்சிகளில் ஒன்றாகும்.

சித்தம் தவிர, தமிழ் பள்ளிகள், வழிபாட்டு இல்லங்கள் மற்றும் இந்திய சிலாங்கூர் தொழில்முனைவோர் மேம்பாடு (I-Seed) ஆகியவற்றை மேம்படுத்துவதில் உதவி உள்ளது. இந்த முயற்சிகள் இந்திய சமூகத்திற்கு டத்தோ’ மந்திரி புசாரின் பதியதும், சீர்படுத்தப்பட்ட திட்டங்களும் ஆகும் என்றார்.

 


Pengarang :