ECONOMYHEALTHNATIONALPBT

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் “பொய்ஸ்” திட்டம் உதவி

பெட்டாலிங் ஜெயா, நவ-10  பொய்ஸ் எனப்படும் வெப்பத் திட்டு தொற்று தடுப்பு திட்டத்தில்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 113,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

வேலையிடத்தில் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான அரசின் முயற்சியில் உயர்கல்விக் கூடங்களும் இணைந்துள்ளதாக மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேற்று இங்குள்ள  ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற  பிரிட்டிஷ் மலேசிய வர்த்தக சபையுடனான வட்டமேசை  மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்  

மாணவர்கள் உட்பட 73,000 க்கும் அதிகமானோரை உள்ளடக்கிய இத்திட்டத்தில் 53 உயர் கல்விக்கூடங்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்றார் அவர்.

வேலையிடங்களில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு ஜனவரி 6 ஆம் தேதி இந்த பொய்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பதிந்து கொண்ட முதலாளிகள் நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ள இடஙகள் மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க குழுக்களை அமைக்க வேண்டும்  என்றார்..

Pengarang :