MEDIA STATEMENTPBTSELANGOR

2022 வரவு செலவுத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு தேவை

ஷா ஆலம், நவ 10- மேரு உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்த வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கிடு வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பிரச்சனை மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கால்வாய்களை சீர் செய்வது போன்ற பணிகளில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் அதிகமான முதலீட்டாளர்களை கவர்வதற்கு ஏதுவாக மாநில அரசு வரிச்சலுகைகளை அறிவிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சொன்னார்.

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 8 ஆம் தேதி கூறியிருந்தார்.

வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒரு வார கால விவாதித் திற்கு பின்னர் அந்த வரவு செலவுத் திட்டம் அவையில் ஏற்றுக் கொள்ளப்படும்.


Pengarang :