KUALA LUMPUR, 25 Ogos — Pekerja Mohd Adam Abd Nasir menunjukkan sijil digital vaksinasi lengkap ketika tinjauan di sebuah restoran sekitar ibu kota, hari ini.?Usaha itu dapat meningkatkan tahap keyakinan para pelanggan yang berkunjung ke setiap premis membuat urusan jual beli dengan lebih selamat.?–fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

“மலேசிய ஆரோக்கியமான நாடு அல்ல“- அமைச்சர் கைரி கூறுகிறார்

கோலாலம்பூர், நவ 11– இருதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை நாட்டு மக்கள் அதிகம் எதிர்நோக்கி வருவதால் மலேசியா ஒரு ஆரோக்கியமான நாடு அல்ல என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு மலேசியர்கள் மத்தியில் மிகவும் குறைவாக உள்ளதாக அவர் சொன்னார்.

மலேசியா ஆரோக்கியமான நாடா? என்று என்னைக் கேட்டால், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்றுதான் கூறுவேன். உடல் பருமன் மற்றும் இருதய நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் மலேசியாவும் உள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணங்கள் ஏற்பட்டதற்கு அந்நோய்த் தொற்று கண்டவர்களில் பெரும்பாலோர் இத்தகைய கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததே காரணம் என்று அவர்
குறிப்பிட்டார்.

மலேசியர்களில் நான் உள்பட இருவரில் ஒருவர் உடல் பருமனாக உள்ளனர். நான்கு மலேசியர்களில் ஒருவர் சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இருபது பேரில் ஒருவர் மட்டுமே சமசத்து உணவை உட்கொள்கிறார் என்றார் அவர்.

சுமார் ஐந்து லட்சம் பேர் மனச்சிதைவினால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வ ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் சொன்னார்.

டிவி ஒன்றில் இன்று ஒளிபரப்பான செலாமாட் பாகி மலேசியா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆரோக்கிய மலேசியா தேசிய திட்டத்தை நிஜமாக்குவதற்கு ஏதுவாக மக்கள் தங்களை மாற்றிக் கொண்டு உடலாரோக்கியம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். அரசாங்கத்தை அல்லது அமைச்சை நம்பியிராமல் அவர்கள் சுயமாக தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கைரி கேட்டுக்


Pengarang :