ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அரசாங்க ஊழலை ஆதரிக்கும் செயல் தேசிய கணக்காய்வு துறைக்கு நிதியை வெட்டியது.

ஷா ஆலம், 11 நவ: பாண்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய கணக்காய்வு துறைக்கு 4 மில்லியன் ரிங்கிட் வெட்டப்பட்டது குறித்து நாடாளுமன்ற  மக்களவையில் கேள்வி எழுப்பினர். இது அரசாங்க செலவினங்களைக் கண்காணிப்பவர்களை தண்டிக்கும் செயல் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என அஞ்சுவதாக கூறினார்.

சமீபத்தில் அவையில்  தெரிவிக்கப்பட்ட 620 மில்லியன் ரிங்கிட் நிதி இழப்பு போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் எவ்வளவு  தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது, தவறான செய்தியை இந்த நடவடிக்கை நாட்டுக்கு அனுப்பியதாக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.

ரிங்கிட் 620 மில்லியன் நிதியினை மக்களுக்கு பயனளிக்கும் வெள்ளத் தணிப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு செலவுகளை ஈடுகட்ட முடியும் என்பது தெளிவாகிறது.

“இன்றைய நிலையில், ஒவ்வொரு அமைச்சிலும் செலவினங்களைச் சரிபார்க்க தேசிய தணிக்கைத் துறையின் கண்காணிப்பை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும், ஆனால் கணக்காய்வுத் துறைக்கு 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு குறைக்கப் பட்டுள்ளது, அது ஏன் ?

“இப்போது, ​​நாட்டின் வருமானம் சுருங்குவது மட்டுமல்லாமல், கடன் ரிங்கிட் 1 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, எனவே நம்மிடம் உள்ள ஒவ்வொரு காசையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் டேவான் ராக்யாட்டில், பட்ஜெட் 2022 விவாத அமர்வில் கூறினார்.

கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிராக போராடும்  போது அதிக தேவைகள் உள்ள சுகாதார அமைச்சுடன் (MOH) ஒப்பிடும்போது பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் பெரிய ஒதுக்கீடு முன்மொழியப்பட்டது என்றும் முன்னாள் துணைப் பிரதமரும், கெ அடிலான் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கேள்வி எழுப்பினார்.

“கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக போராட டாங்கிகளை வாங்க வேண்டுமா?  எது முக்கியம் என்று மதிப்பாய்வு செய்தில் கவனம் செலுத்துமாறு நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

“நாம் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதே,​​நமக்கு ஆரோக்கியத்தின் மகிமை தெரியும், ஆரோக்கியமாக இருக்கும் போது, அச்சேவைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், சுகாதார அமைச்சிக்கான MOH ஒதுக்கீட்டைக் குறைக்காதீர்கள்,” என்று அவர் கூறினார்.


Pengarang :