ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சீனியைத் தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பீர்- நோர் ஹிஷாம் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 12-  நீரிழிவு மற்றும் சர்க்கரை கலாச்சாரம்தற்போது சமூகத்தில் வழக்கமாகி வருவதைக் கருத்தில் கொண்டு மலேசியர்கள் தங்கள் உணவில் சர்க்கரை அளவைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நீரிழிவு நோய் மலேசியாவில் உள்ள முக்கிய நோய்களில் ஒன்றாக  விளங்குவதோடு  ஐந்தில் ஒரு பெரியவர் இந்த நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை  இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

2019  ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரம் மற்றும் கடும் நோய்கள் தொடர்பான ஆய்வின் தரவுகளின்படி 18  வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களிடையே  நீரிழிவு நோய் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார். 

கடந்த 2011 ஆம் ஆண்டில் 11.2  விழுக்காடாக இருந்த நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில்  13.4  விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த  2019 இல் இந்த எண்ணிக்கை 18.3 விழுக்காடாக பதிவாகியுள்ளது. அவர்களில் 3லட்சம் பேர் பெரியவர்களாவர் என்று அவர் கூறினார்.

நீரிழிவு நோய் நம் உடலைப் பாதிக்கிறதுகண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. நாட்டின் முதன்மை ஆட்கொல்லி நோயாக நீரிழவு நோய் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டிற்கான நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு “ இன்சுலின் கண்டுபிடிப்பின் ஒரு நூற்றாண்டில் நீரிழிவு சிகிச்சைக்கான அணுகுமுறை“  என்ற கருப்பொருளில் இயங்கலை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். 

 


Pengarang :