ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு வெ.45. 5 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 12- சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் வெள்ளப் பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு 45 கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு வெள்ள பிரச்சனையை எதிர்நோக்கும் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இது தவிர ஐந்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்காக 12 வது மலேசியத் திட்டத்தின் கீழ் 135 கோடி வெள்ளியை மத்திய அரசிடம் தாங்கள் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண்பதற்காக 25 கோடி வெள்ளி மேம்பாட்டு நிதியை மாநில அரசு அங்கீகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்கை காப்பார் கிச்சில் மற்றும் சுங்கை காப்பார், சுங்கை  லங்காட் 2ஆம் கட்டம், சுங்கை பூலோ இரண்டாம் கட்டம், அனாக் சுங்கை ஊடாங் இரண்டாம் கட்டம், மற்றும் சுங்கை குண்டாங் ஆகியவையே அந்த ஐந்து வெள்ளத் தடுப்பூத் திட்டங்களாகும் என்றும் அவர் விளக்கினார். 


Pengarang :