ECONOMYMEDIA STATEMENTPBT

சிலாங்கூர் வேலை  வாய்ப்புச் சந்தை வழி 400 பேருக்கு வேலை கிடைத்தது

உலு லங்காட், நவ 13- இதுவரை மூன்று  இடங்களில் நடத்தப்பட்ட சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையின் வழி 400க்கும் மேற்பட்டோருக்கு வேலை  கிடைத்துள்ளது.

மேலும் 500 பேருக்கு இரண்டாவது நேர்முகப் பேட்டியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு கிடைத்துள்ளதாக மாநில அரசு செயலகத்தின் மனித வள நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைமைச் செயலாளர் முகமது பைஸ் முகமது யூசுப் கூறினார்.

இன்று உலு லங்காட், பண்டார் பாரு பாங்கி டேவான் டைமென்சியில் நடைபெறும் வேலை வேலை வாய்ப்புச் சந்தை உள்பட மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மேலும் மூன்று நிகழ்வுகள் மூலம் இன்னும் கூடுதலானோர் வேலை வாய்ப்பினை பெறுவர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இதுவரை இத்திட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் பங்கேற்றுள்ளனர். என்று அவர் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ, பாயா ஜெராசிலும் ஷா ஆலமிலும் அடுத்து நடைபெறவிருக்கும் இத்கைய வேலை வாய்ப்புச் சந்தைகளில் பங்கேற்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் ஆறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த வேலை வாய்ப்புச் சந்தைகளின் வழி 25,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.


Pengarang :