Ketua Pembangkang Datuk Seri Anwar Ibrahim berucap pada Wacana Pemicuan Undi 18 Negeri Selangor di Dewan Jubli Perak Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah, Shah Alam pada 13 November 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYNATIONALPBTSELANGOR

“டவுன் ஹால் 18 வாக்களிப்பு” நிகழ்வு இளையோர் அரசியல் சூழலை மாற்றும்

ஷா ஆலம், நவ 14- டவுன்ஹால்  18 வாக்களிப்பு நிகழ்வை நடத்தும் மாநில அரசின் முயற்சி, நாடு முழுவதும் குறிப்பாக சிலாங்கூரில் உள்ள இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் சூழலை மாற்றுவதற்கான சரியான நடவடிக்கையாக விளங்குகிறது.

சிலாங்கூரில் உள்ள 1,226 இளைஞர்களில் 72.4 விழுக்காட்டினர்  அரசியல் மேம்பாடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பது யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைகழகம்  நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக என்று டாருள் ஏசான் கழகத்தின் நிர்வாகத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் ஓத்மான் கூறினார்.

பதினெட்டு முதல் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் நடத்திய ஆய்வில், அத்தரப்பைச் சேர்ந்த  பெரும்பாலோர் அரசியல் முன்னேற்றங்களில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஏனென்றால், அவர்கள் நடப்பு அரசியல் நிலவரங்களை அறிந்திருக்கவில்லை என்பதோடு அரசியல்வாதிகளின் நடத்தையிலும் சலிப்படைந்துள்ளனர் என்றார் அவர். 

அவர்களில் பெரும்பாலோருக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. அத்தரப்பினருக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த இளம் தலைமுறையின்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

 இங்குள்ள ஜூப்லி பேராக் அரங்கில் நேற்று நடைபெற்ற  டவுன் ஹால் 18  வாக்களிப்பு சொற்பொழிவு நிகழ்வில் உரையாற்றும் போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்தகைய நிகழ்வுகளின் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். குறைந்த படசம் வாக்களிக்கச் செல்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் கூறினார். 

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில  63.3 விழுக்காட்டினர் 18 வயதினருக்கு
 வாக்குரிமை வழங்கப்படுவதை ஆதரிப்பதோடு தேர்தலில் தாங்கள் வாக்களிக்கவிருப்பதாககூறினர் என்றும் அவர் தெரிவித்தார்.

Pengarang :