ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 பாடும் திறன் போட்டி வெற்றியாளர் கீர்த்திகா ராமலிங்கம்

கிள்ளான் நவம்பர் 14; இன்று மாலை 7.00 மணிக்கு கிள்ளான் டேவான் ஹம்சாவில் முற்றுபெற்ற சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 பாடும் திறன் போட்டி இறுதி சுற்று வெற்றியாளராக, கீர்த்திகா ராமலிங்கம் இரண்டாயிரம் வெள்ளி பரிசு தொகையை தட்டிச்சென்றார்.

இரண்டாம் நிலையில் அபிஷேகப்பிரியன் ஆயிரத்து ஐநூறு வெள்ளி பரிசு தொகையை வென்ற வேளையில் மூன்றாம் நிலையை T. கலைமதி வென்று,  ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை தட்டிச் சென்றார்.

வெற்றியாளர்களுக்கான பரிசு தொகையை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு  சார்ல்ஸ் சந்தியாகோவும், கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோரும் எடுத்து வழங்கினர்.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இப் போட்டியின் முதல் சுற்று கடந்த அக்டோபர் 16 தொடங்கி நடைபெற்றது.

 இந்த போட்டி 7 முதல் 14 வயதுள்ள அனைத்து சிலாங்கூர் வாழ் இந்தியர்களும் பங்கு கொள்ளலாம் என்றும், இந்த போட்டிகளுக்கு மொத்த பண வெகுமதியாக RM 14,000 வரை வழங்கப்படும் மற்றும் அரையிறுதிக்கு முன்னேறும் 20 குழந்தைகள் ‘தொழில்முறை’ வழிகாட்டிகளால் பயிற்சி அளிக்கப்படும் இறுதி வரை அவர்களின் திறமைகளை மேம்படுத்த உதவும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.


Pengarang :