ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சம்பவங்களில்  97 விழுக்காடு குறைவான நோய்த் தாக்கத்தைக் கொண்டவை

 கோலாலம்பூர், நவ 16- நாட்டில் நேற்று பதிவான 5,143 புதிய கோவிட்-19 சம்பவங்களில்  97.6 விழுக்காடு அல்லது 5,017 சம்பவங்கள் குறைந்த  நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

எஞ்சிய 2.4 சதவீதம் அல்லது 126 சம்பவங்கள்   மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகையைச் சேர்ந்தவை என அவர் கூறினார். நோய்த் தொற்று கண்டவர்களில் 526 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில்  மேலும் 250 பேருக்கு  சுவாச உதவி தேவைப்படுகிறது என்று நேற்று வெளியிட்ட  அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

நேற்று  பதிவான 5,143 கோவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்களுடன் சேர்த்து நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 51 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர். இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 4,551 பேர் குணமடைந்தனர். இதன் வழி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 55  ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் பரவல் தொடர்பான விரிவான தகவல்கள் https://covidnow.moh.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக  அறிந்து கொள்ளலாம்.


Pengarang :