ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2022 வரவு செலவுத் திட்டம் புதிய அச்சுறுத்தலை அகற்றும்- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 19- கடந்த ஈராண்டுகளாக அனைத்து துறைகளுக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்திய கோவிட்-19 நோய்த் தொற்று  2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் சிலாங்கூர் அரசுக்கு  கூடுதல் அனுகூலத்தை வழங்கியுள்ளது.

இம்மாதம் 26 ஆம் தேதி  தாக்கல் செய்யப்படவிருக்கும் அந்த வரவு செலவுத் திட்டம் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான கவசங்களைக் கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் பாதுகாப்பளிக்கும் வகையில் செலவின மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை நாங்கள் கட்டமைத்துள்ளோம். சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொண்ட போதிலும்  அவற்றை வெற்றிகரமாக கையாண்டு விட்டோம் என்றார் அவர்.

நாம் குறிகோளுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இறுதியில் மீட்சி காணும் போது பழைய நிலைக்கு நம்மால் திரும்ப முடியும் என்று நேற்று வழங்கிய பிரத்தியேகப்  பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் வரும் நவம்பர் 26 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

 இந்த வரவு செலவுத் தாக்கல் டிவி சிலாங்கூர் ( selangortv.my ) மற்றும்  மீடியா சிலாங்கூர் முகநூல் ( www.facebook.com / MediaSelangor ) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய செய்தித் தொகுப்பு சிலாங்கூர் கினி ( selangorkini.my),மாண்டரின் ( selangorkini.my/zh-hans/ ) மற்றும் தமிழ் ( selangorkini.my/ta/ )  ஆங்கிலப் பதிப்பை Selangorjournal.my  ஆகிய  நான்கு இணைய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

 

 


Pengarang :