ECONOMYMEDIA STATEMENTPBT

குற்றப்பதிவுகளுக்கு 70 விழுக்காடு வரை கழிவு- எம்.பி.எஸ்.ஏ, வழங்குகிறது

ஷா ஆலம், நவ 22- வரும் டிசம்பர் மாதம் முழுவதும் வாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 10 வெள்ளியை குறைக்க ஷா ஆலம் மாநகர் மன்றம் முன்வந்துள்ளது.

இந்த 10 வெள்ளி அபராதத் தொகை குறைப்பின் வழி குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை பொதுமக்கள் விரைந்து செலுத்துவதை ஊக்குவிக்கவும் வர்த்தக முடக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கை போன்ற பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளாமலிருப்பதை உறுதி செய்யவும் இயலும்.

இது தவிர, 1983 ஆம் ஆண்டு சிகையலங்கரிப்பு நிலைய துணைச் சட்டம், 2005 ஆம் ஆண்டிற்கான பொது பூங்கா துணைச் சட்டம், 2005 ஆம் ஆண்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பு துணைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்கு 70 விழுக்காடு வரை கழிவு வழங்கவும் தாங்கள் முன்வந்துள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த அபராதத் தொகைகளை ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் தலைமையகத்திலும் சுங்கை பூலோ, கோத்தா கெமுனிங் மற்றும் செத்தியா ஆலமில் உள்ள கிளை அலுவலங்களிலும் செலுத்தலாம்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அபராதத் தொகையை விரைந்து செலுத்துமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :