ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

செலங்கா செயலியில் உள்ள கூடுதல் வசதிகள் பொதுமக்களின் பணியை எளிதாக்கும்- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 24- பாதுகாப்பான முறையில் பொது இடங்களுக்குச் செல்ல உதவும் செலங்கா செயலியில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்கள் பொது மக்களின் அன்றாடப் பணிகளை எளிதாக்கியுள்ளது.

கோவிட்-19 நோய்ப் பரிசோதனைக்கு முன்பதிவு செய்வது மற்றும் சுயப் பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கான வசதி போன்றவை இந்த செயலியில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்களாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நவம்பர் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்ட்ட கூடுதல் அம்சங்களின் வாயிலாக பொது மக்கள் பாதுகாப்பான முறையில் எல்லைகளைக் கடப்பதற்கு திட்டமிட முடியும் என்று அவர் சொன்னார்.

இந்த புதிய அம்சங்களின் வாயிலாக சிலாங்கூர் ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளது. அமல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களின் தேவைகேற்ப உள்ளதை உறுதி செய்வதற்காக நாட்டின் நடப்பு மேம்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாநில அரசு தன்னை வளர்த்துக் கொள்கிறது என்றார் அவர்.

இந்த செயலியை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் அன்றாடப் பணிகளை எளிதாக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை சிலாங்கூர் மாநில மக்கள் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

செலங்கா செயலியை புதுப்பிப்பதன் மூலம் புதிய அம்சங்களை பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பினை பொது மக்கள் பெற முடியும்.


Pengarang :