Ahli Dewan Negeri (ADN) Kota Anggerik, Mohd Najwan Halimi bersama jawatankuasa pengurusan Maahad Tahfiz Al-Quran Wa Assunnah selepas berbincang di Surau An-Nur, Seksyen U9 Shah Alam. Foto Facebook NAJWAN HALIMI
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க இலக்கவியல் திட்டத்தை தரம் உயர்த்துவீர்- கோத்தா அங்கிரிக் உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், நவ 25- இளையோரின் பொருளாதார நடவடிக்கைகள் விரிவாக்கம் காண்பதற்கு ஏதுவாக இலக்கவியல் திட்டங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பின்ர நஜ்வான் ஹலிமி வலியுறுத்தியுள்ளார்.

உலகம் விரைந்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நடப்புச் சூழலில் இளையோர் இன்னும் பழைய பொருளாதார வடிவத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால் அவர்கள் மேம்பாட்டிலிருந்து விடுபட்டு விடுவார்கள் என்று அவர் சொன்னார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இலக்கவியல் திட்டம் தொடர்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத் தரம் உயர்த்துவதற்கான வழிவகைகளை நாம் ஆராய வேண்டியுள்ளது. காரணம், ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தில் வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

இந்த இலவச பஸ் சேவை ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநில அரசுக்கு மட்டும் உரியது அல்ல. மாறாக இத்திட்டத்தின் வாயிலாக இளையோரின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வழிவகைகளும் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெற்ற விவாத நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிக பயனைத் தராத ஒரு முறை மட்டுமே வழங்கும் உதவித் திட்டதைப் போலன்றி இளையோருக்கு ஆக்ககரமான பயனைத் தரக்கூடிய திட்டங்களை மாநில அரசு அமல் படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

சித்தம் (இந்திய தொழில் ஆர்வலர் மேம்பாட்டு மையம்) போன்ற திட்டங்களில் நாம் முறையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளையோர் பயன் பெறுவதற்கு ஏதுவாக அத்திட்டம் அனைத்து இனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.


Pengarang :