ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

திடீர் வெள்ளம்- விதிகளை மீறும் நெடுஞ்சாலை நடத்துநர்கள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், நவ 25- மண் அரிப்பு மற்றும் சகதி வெள்ளத்தை கட்டுப்படுத்துவது உள்பட நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் நெடுஞ்சாலை நடத்துநர்களுக்கு எதிராக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அத்தரப்பினரின் அலட்சியப் போக்கினால் வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மேற்கெள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளால் சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் அம்பாங் ஆற்று நீரில் சகதி கலந்தது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக தமது தரப்பு சந்தேகிக்கிறது என்று அவர் சொன்னார்.

வெள்ளத்திற்கான முக்கிய காரணம் என்னவென்றால்  மழைப் பொழிவின் அளவு மூன்று மணி நேரத்தில் 100 மில்லி மீட்டராக இருந்ததுதான். அளவுக்கு அதிகமான நீரை உடனடியாக வெளியேற்றும் ஆற்றலை வடிகால்கள் கொண்டிராத காரணத்தால் அப்பகுதியில் திடீர் வெள்ளம் உணடானது என்றார் அவர்.

அம்பாங் வட்டாரத்தில் குறிப்பாக, கம்போங் லெம்பா ஜெயா உத்தாரா மற்றும் கம்போங் லெம்பா ஜெயா செலத்தான் ஆகிய பகுதிகளில் ஏற்பட் சகதி வெள்ளத்திற்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :