ECONOMYMEDIA STATEMENTSELANGOR

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மானியம் 400,000 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 150,000 வெள்ளி மானியத் தொகை அடுத்தாண்டு முதல் 400,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் கூட்டரசு ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து வருடாந்திர மானியமாக 400,000 வெள்ளியை பெறுகின்றனர். மாநில அரசு வழங்கும் 400,000 வெள்ளியுடன் சேர்த்து அவர்களுக்கான மானியம் 800,000 வெள்ளியாக உயர்வு காண்கிறது என்றார் அவர்.

மலேசியாவின் முன்னோடி மாநிலம் என்ற சிலாங்கூரின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவும் அரசியல் வேறுபாடின்றி மக்களுக்கு உதவும் மாநில அரசின் கோட்பாட்டிற்கு ஏற்பவும் இந்நடவடிக்கை அமைவதாக அவர் தெரிவித்தார்.

மாநில அரசுக்கு ஆதரவாக இருக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான மானியம் 500,000 வெள்ளியாக உயர்த்தப்படும் என்றும் இந்த நிதியை அரசினா நியமிக்கப்படும் ஒருங்கிணைப்பாளர் நிர்வகிப்பார் என்றும் அவர் சொன்னார்.

அதே சமயம், மத்திய அரசு வழங்கும் மானியம் தவிர்த்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலாக 50,000 வெள்ளி வழங்கப்படும். அலுவலகங்களை பராமரிப்பதற்கு இந்த நிதியை அவர்கள் பயன்படுத்தலாம் என்றார் அவர்.


Pengarang :