ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

செஹாட் சிலாங்கூர் உதவித் திட்டத்திற்கு   50 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம் 29 நவ ;அடுத்த ஆண்டிற்காக Bantuan Sihat  Selangor  எனப்படும்  செஹாட் உதவித் திட்டத்திற்காக  சிலாங்கூர் அரசாங்கம்  50 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.  2009ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப் பட்டுவரும்  செஹாட் உதவித் திட்டத்தினால் தகுதிபெற்ற  4,000 பேர் இதுவரை  பயன் அடைந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு முதல்  இரத்த சோகை நோயாளிகள்,   புற்றுநோயாளிகள்  மற்றும்  கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்   செஹாட் உதவித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்திற்கான செலவு, சத்துணவு, இரத்த சுத்திகரிப்பு (டைலசிஸ்),விழிப்படல அறுவை சிகிச்சை ( கட்டெரக்) , சிறு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ  உதவி சாதனங்கள் வாங்குவதற்கும் இத்திட்டத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் மற்றும்  மாற்று திறனானிகள் சிகிச்சை பெறுவதற்கு  மருத்துவ உதவியாளர்களின் தேவை  என கேட்டுக் கொள்வோரின் விண்ணப்பங்களையும்   மாநில அரசாங்கம் பரிசீலிக்கும் .

 


Pengarang :