ECONOMYNATIONALPBTSELANGOR

மக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் 2022 ம் ஆண்டு சிலாங்கூர் மாநில பட்ஜெட்- குணராஜ்

கிள்ளான் 30 நவ ;- செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தீபாவளி பொது உபசரிப்பை செந்தோசாவில் கடந்த சனிக்கிழமை புதிய இயல்பில் நடத்தினார்.

அந்நிகழ்வில் 2022 ம் ஆண்டின் சிலாங்கூர் மாநில பட்ஜெட் குறித்த கேள்விக்கு  பதிலளிக்கையில் .

மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது 2022 ம் ஆண்டின் சிலாங்கூர் மாநில பட்ஜெட் என்றார். மக்கள் நோய் தொற்று பாதிப்பில் இருந்த விரைவில் வெளிவர அவர்களுக்கு  தேவைப்படும் பல அம்சங்களை அது கொண்டுள்ளது என்றார்  அவர்.

இந்த பட்ஜெட், மக்கள் நலன், அரசாங்க வரி விலக்கு அல்லது கட்டண ஒத்திவைப்பு, மருத்துவ உதவி, கல்வி உதவி, வேலை இழந்தவர்களுக்கு உதவி, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான அரவணைப்பு, நடமாட்ட கட்டுப்பாடு காலத்தில் தடையின்றி வாழ்வை நகர்த்தி செல்வதற்கு பேருதவியாக இருந்த இலக்கவியல் போன்ற பல அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகள்,  இந்து ஆலயங்கள், பொது இயக்கங்கள், மன்றங்களுக்கான ஆண்டு மானியங்களுடன், இந்தியர்களின் தொழில் துறைகளும் மீண்டும், மீட்சி பெற சித்தம், ஐ- சீட்  என இரண்டு பிரிவுகள் இந்திய தொழில் முனைவோர்களை குறியாக கொண்டு தோற்றுவிக்கப்பட்டதற்கான ஒதுக்கீடுகளும் உண்டு.

மக்கள்  அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்காக அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களை நாடலாம், உதவி திட்டங்களுக்கான தகவல்களை இணையத்தில் பெறலாம்,  அதற்கான தொடர்பு மையங்களுடன் தொடர்புக் கொண்டு, தொலைபேசி வாயிலாகவும் தொடர்புக்கொண்டு விவரங்களை பெறலாம் என்றார்

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தீபாவளி பொது உபசரிப்பினை கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் புதிய இயல்பில் தொகுதி மக்களுடன் கொண்டாடினார்.


Pengarang :