Sukarelawan DUN Batu tiga membantu orang ramai mendaftar Langkah Masuk Dengan Selamat (SELagkah) dalam program Vaksin Selangor (Selvax) bergerak DUN Batu Tiga di Dewan Majlis Bandaraya Shah Alam (MBSA) pada 13 September 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 2.27 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 3 – நேற்று இரவு 11.59 மணி வரை நாட்டில் மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 144 பெரியவர்கள் அல்லது  97 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும்  98.4 சதவீதம் பேர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 39 ஆயிரத்து 780 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், 12 முதல் 17 வயது வரையிலான  இளம் பருவத்தினரில் 86.3 சதவீதம் பேர் அல்லது 27 லட்சத்து 16 ஆயிரத்து 48 பேர்  தடுப்பூசியை முழுமையாகப் முடித்துள்ள வேளையில்  89.8 சதவீதம் பேர் அல்லது 28 லட்சத்து 26 ஆயிரத்து 761 பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று நாட்டில் 150,357 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 8,649 பேர்  இரண்டாவது தடுப்பூசியையும் 5,408 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில்136,300 பேர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்.

இது நேற்றைய நிலவரப்படி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 5 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது. ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 28 ஆயிரத்து 294 ஆகும்.


Pengarang :