ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் சட்ட உதவி நிதி ஒடுக்கப்பட்டவர்களின் நலனைக் காக்கும்- மந்திரி புசார

ஷா ஆலம், டிச 8- சிலாகூர் அரசின் 2022 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சட்ட உதவி நிதி, நிராதரவான  நிலையிலிருக்கும் தரப்பினரின் நலனைக் காக்கும் மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் இந்த சட்ட உதவி நிதி உருவாக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குடும்ப வன்முறை மற்றும் வேலையிடப் பிரச்சனைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு சட்ட உதவி பெறுவதற்குரிய வசதியைக் கொண்டிராதவர்களுக்கு உதவும் பொருட்டு பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் இந்த சட்ட உதவித் நிதித் திட்டத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றம் மற்றும் சிலாங்கூர் சட்ட உதவி மையத்தின் உதவியுடன் இந்த நிதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.

இத்திட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட தரப்பினர் சட்ட உதவியைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :