ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள், ஒன்பது அறிக்கைகள் நிறைவேற்றம்

ஷா ஆலம், டிச 10- சிலாங்கூர் சட்டமன்றத்தில் நேற்று இரு தீர்மானங்கள் மற்றும் ஒன்பது அறிக்கைகள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2020 சிலாங்கூர் இளைஞர் கொள்கை மற்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற நிரந்தர விதிகளில் திருத்தம் செய்யும் பரிந்துரை ஆகிய இரு தீர்மானங்களும் அவையில் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

2020 இளைஞர் கொள்கை மீதான தீர்மானத்தை இளைய தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மானும் சட்டமன்ற நிரந்தர விதிகளை திருத்தும் தீர்மானத்தை வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம்மும் முன்மொழிந்த தாக அவர் குறிப்பிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது அறிக்கைகள் வருமாறு:

  • தடைசெய்யப்பட்ட இடங்கள்/பகுதிகள்/முக்கியமான இலக்குகளாக நீர் ஆதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆர்ஜிதம்செய்வது

 

  • ஹோட்டல் கட்டிடங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு பட்டா வழங்குவதற்கான விண்ணப்பம்.

 

  •  கிராமங்களை நிர்வகித்தல் மற்றும் அரசு பதிவேட்டில் வெளியிடுதல் மற்றும் ஒரு சிறப்புச் சட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பங்கு.

 

  • சிலாங்கூர் நிலங்கள் மற்றும் சுரங்க அலுவலகத்தில் பரிவர்த்தனை முகப்பிடச் செயல்திறன்.

 

  • சிலாங்கூரில் ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு உதவி வழங்குவதை வகை பிரித்தல்.

 

  • வறுமை ஒழிப்புக்கான சிறப்புத் தேர்வுக் குழுவின் பணி.

 

  • டாருல் ஏசான் பெசலிட்டிஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் தொடர்பான அறிக்கை.

 

  • சட்ட விரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் நடைமுறை முடிவுக்கு வந்தப் பின்னர் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் மீதான நடவடிக்கை அமலாக்கம்.

 

  • பெர்மோடாலன் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட்டின் தாமன் புத்ரா பெர்டானா வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானம் குறித்த நிலை.

 

 

 


Pengarang :