ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

97.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 10 - நாட்டில் நேற்றைய நிலவரப்படி  மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 52 ஆயிரத்து 434 பேர் அல்லது  97.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 98.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரத்து 502 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளையோரில் 90.1 விழுக்காட்டினர் அல்லது  28 லட்சத்து 38 ஆயிரத்து 110 பேர் குறைந்தது ஓரு டோஸ்  பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 86.8 சதவீதம் அல்லது 27 லட்சத்து 32 ஆயிரத்து 740 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று மொத்தம் 140,831 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 7,332 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும், 4,708 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 128,791பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரத்து 414  ஆக உயர்ந்துள்ளது.

Pengarang :