Datuk Seri Shaharuddin Khalid. Foto BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதக் கழிவு திட்டம் டிச.15 வரை நீட்டிப்பு- ஜே.பி.ஜே. அறிவிப்பு

கோலாலம்பூர், டிச 11- நிலுவையில் இருக்கும் சாலை போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 80 விழுக்காடு வரை கழிவு வழங்கும் திட்டத்தை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

நாளையுடன் முடிவுக்கு வர வேண்டிய இந்த சலுகை வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சாலை போக்குவரத்து இலாகா தனது முகநூலில் கூறியது.

மலேசிய குடும்ப அபிலாஷை திட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கட்டணக் கழிவு முகப்பிடங்களை மூடுவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த முகப்பிடங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.

கோவிட்-19 தொடர்பான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.


Pengarang :