ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

இம்மாநிலவாசிகளை கல்விகற்ற அறிவார்ந்த மக்களாக உருவாக்குவதில் மாநில அரசு அக்கறை

கோம்பாக் டிச 12; – பத்துமலை தமிழ்ப்பள்ளியில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆற்றிய உரையில், கல்வி மத்திய அரசின் பொறுப்பு என்றாலும் கடந்த 2009 ஆண்டு முதல் மாநிலத்தில் எல்லா மொழிப் பள்ளிகளும் கல்வியில் சிறந்து விளங்க கல்விக்கு பெரிய ஒதுக்கீடுகளை சிலாங்கூர் மாநில  அரசு வழங்கி வருகிறது.

இது கல்விகற்ற அறிவார்ந்த மக்களாக இம்மாநிலவாசிகளை உருவாக்குவதில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது என்றார்.

அதேபோல் சிலாங்கூர்  கோவிட் தொற்றை எதிர்த்து போராடுவதிலும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது என்றார் அவர். நாம் இலவச நோய் பரிசோதனைகளையும், தடுப்பூசிகளையும் மாநில மக்களுக்கு வழங்கி வந்ததுடன், தடுப்பூசி மையங்களுக்கு சென்று வர ஏழைகளுக்கு போக்குவரத்து கட்டண கழிவுகளையும் ஏற்படுத்தி தந்தோம்.

மாநிலம் ஒரு நோய் தொற்றுக் கொண்ட மாநிலமாக நீண்ட நாட்களுக்கு இருக்க கூடாது,  அதனால் மக்கள் அதிக வேலை வாய்ப்புகளை இழப்பார்கள், மக்களின் வாழ்க்கைத் தரம் சரிவடையும் என்பதால் அதிக நிதி செலவில் நமது மக்களுக்கு சுகாதார சேவைகளை மேற்கொண்டோம்,

அதைப்போலவே, நோய் பாதிப்பில் வேலைகளை, தினசரி வருமானத்தை இழந்தவர்களின் குடும்பங்கள் உணவுக்கு சிரமப்படாமல் இருக்க அதிக உணவு கூடைகளும்  ஏழை மக்களுக்கு  அனுப்பி வைக்க பல ஏற்பாடு செய்தோம் என்றார்.

இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய நம்மிடம் பொருளாதார பலம் இருக்க வேண்டும், அதற்கு நல்ல நிர்வாகம் இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த அரசு பல சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும்  ஆற்றல் கொண்டது மட்டுமல்ல இந்த நாட்டிற்கே வழி காட்டக்கூடிய ஒன்று என்பதை நிரூபித்துள்ளது.

இன்று கல்விக்கு மாநிலத்தில் உள்ள எல்லா மொழிப் பள்ளிகளுக்கும் ரிங்கிட் 23.2 மில்லியனை 2021 ம் ஆண்டுக்கான கல்விமானியமாக வழங்குவது நமது ஆற்றலை நாட்டுக்கும், மக்களுக்கும் நன்கு புலப்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும், கல்வி மானிய ஒதுக்கீடுகளை அடுத்த ஆண்டின் முற்பகுதியில் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.,


Pengarang :