ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சாலைகளைச் சீரமைப்பதில் ஆற்றலை வளர்த்துக் கொள்வீர்- குத்தகையாளர்களுக்கு நினைவுறுத்து

ஷா ஆலம், டிச 13- சாலைகளைப் பராமரிப்பது தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை குத்தகையாளர்கள் அறிந்து கொள்ள மாநில அரசு உதவி புரியும்.

 மாநிலத்திலுள்ள சாலைகள் சிறப்பான தரத்தையும் பயனீட்டாளர்களுக்கு  சொகுசான பயண அனுபவத்தையும் வழங்குவதற்கு புதிய தொழில்நுட்ப பயன்பாடு பெரிதும் துணை புரியும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சியினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

உதாரணத்திற்கு, நான்காம் தொழில் புரட்சி யுகத்தில் சாலைகளின் நிலையைக் கண்டறிவதற்கு ரோபோட்டிக் எனப்படும இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தலாம் என்று அவர் சொன்னார்.

இத்தகைய தொழில்நுட்ப ஆற்றல்களை குத்தகையாளர்கள் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு மாநில அரசு உரிய பயிற்சிகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சாலை பராமரிப்பு பணிகள் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிகளோடு  உயர்நெறி  தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார் அவர்.

 


Pengarang :