ECONOMYHEALTHNATIONALPBT

கொடுத்த வாக்கை காப்பாற்றும் சிலாங்கூர் மாநில அரசு – வீ. கணபதிராவ் புகழாரம்

கோம்பாக் டிச 14; – கடந்த சனிக்கிழமை பத்துமலை தமிழ்ப்பள்ளியில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர்                          வீ. கணபதிராவ் 2021 ம் ஆண்டுக்கான தமிழ்ப்பள்ளிகளின் மானியத்தை தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களிடம்  ஒப்படைத்தனர்.

பெரும்பாலும் ஒரு ஆண்டின் ஒதுக்கீடு என்பது அதே ஆண்டில், நவம்பர் மாத இறுதிக்குள் வழங்கிவிடுவதே முறை. அப்படி ஒப்படைக்கப் படாத மானியத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்வதே  நடைமுறை.

ஆனால் ஆண்டின் இறுதி மாதத்தில், அதுவும் பள்ளிகள் ஆண்டில் கல்வி தவணைகளை சரியாக முடிக்காத நிலையிலும், வாக்களித்த மானியத்தை வாக்களித்தபடி  இந்த அரசு வழங்குகிறது என்றால் நாட்டு மக்களுக்கு இந்த அரசு அளிக்கும் மரியாதைக்கான அளவுகோல், அரசாங்கத்தின் பொறுப்பையும் நாணயத்தையும் அது உணர்த்துகிறது என்றார் வீ. கணபதிராவ் அவர்  உரையில்.

இந்திய சமுதாயத்தின் மீது அரசாங்கம் காட்டும் பரிவு, தமிழ் கல்வி, மொழி மீதும் இந்தியர்கள் மீதும் அரசாங்கம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் மற்றொரு சான்று ஒதுக்கப்பட்ட 50 லட்சம் வெள்ளிகளையும், ஒரு காசு குறையாமல் தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்படியே வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் நாணயத்தை எடுத்துக்காட்டுகிறது.

சிலாங்கூரில் உள்ள 9 மாவட்ட தமிழ்ப்பள்ளிகளும் பெற்றுக்கொண்ட தொகையின் விவரம் பின்வருமாறு.

சபா பெர்ணம் மாவட்டம்.       2 தமிழ்ப்பள்ளிகள்  90 ஆயிரம்                                                            உலு சிலாங்கூர் மாவ.            10 தமிழ்ப்பள்ளிகள் 5 லட்சத்து 60 ஆயி.                          கோலசிலாங்கூர் மாவ.       19 தமிழ்ப்பள்ளிகள் 7 லட்சத்து 15 ஆயி.                                          கோம்பாக் மாவட்டம்              6 தமிழ்ப்பள்ளிகள் 4 லச்சத்து 20 ஆயி.                                              உலு லங்காட் மாவட்ட            7 தமிழ்ப்பள்ளிகள் 3 லட்சத்து 80ஆயி.                                        பெட்டாலிங் மாவட்டம்         16 தமிழ்ப்பள்ளிகள் 9 லட்சத்து 30 ஆயி.                                    கிள்ளான் மாவட்டத்தில்      14 தமிழ்ப்பள்ளிகள் 5 லட்சத்து 60 ஆயி.                                              கோல லங்காட் மாவட்ட.     13 தமிழ்ப்பள்ளிகள் 6 லட்சத்து  5 ஆயி.                                       சிப்பாங் மாவட்டம்                  8 தமிழ்ப்பள்ளிகள் 3 லட்சத்து 50 ஆயி.                                             இந்த மாவட்டத்தில் சுங்கை பீலேக் என்று இடத்தில் எழுப்பும் 9 வது தமிழ்ப்பள்ளி ஆண்டு ஆரம்பத்தில், பள்ளி கட்டுமான தேவைக்கு மானிய கோரிக்கையை வைத்து ஒரு லட்சம் வெள்ளிகளை பெற்றுக் கொண்டனர். அதனுடன் 50 லட்சம் மாநில அரசின் மானியம் முழுவதுமாக விநியோகிக்கப்பட்டு விட்டது.


Pengarang :