ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

விரைவில் கோவிட்-19 தடுப்பு மாத்திரைகள் 90 விழுக்காடு ஆக்கத்தன்மை கொண்டவை

நியுயார்க், டிச 15- மாத்திரை வடிவிலான கோவிட்-19 தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 90 விழுக்காடு ஆக்கத் தன்மை கொண்டவையாக உள்ளது இறுதிக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஃபைசர் நிறுவனம் நேற்று கூறியது.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் இறப்பு விகித்தையும் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் இந்த தடுப்பு மருந்து கட்டுப்படுத்துகிறது. அதே சமயம் தீவிரமாக பரவி வரும் ஒமிக்ரோன் புதிய வகை நோய்த் தொற்றுக்கு எதிரான ஆக்கத் தன்மையையும் இது கொண்டுள்ளது என ஃபைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மிக்கைல் டோல்ஸ்டன் கூறினார்.

வாய் வழி உட்கொள்ளும் இந்த தடுப்பு மருந்து கோவிட்-19 மரணங்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்களை 89 விழுக்காடு வரை குறைத்துள்ளது சுமார் 1,200 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் தெரிய வந்துள்ளதாக இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது.

பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பங்கு கொண்ட யாருக்கும் மரணம் சம்பவிக்கவில்லை. என்னும் தடுப்பூசிக்கான ஆய்வின் போது 12 பேர் உயிரிழந்தனர்.

நோய்த் தொற்றுக்கான தொடக்க அறிகுறி உள்ளவர்கள் பழைய நோய்த் தடுப்பு மருந்தான ரிட்தோனாவிருடன் சேர்த்து இந்த ஃபைசர் மாத்திரையை 12 மணி நேர இடைவெளியில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு எடுக்க வேண்டும். இந்த மாத்திரைக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அது பெக்ஸ்லோவிட் என்ற பெயரில் விற்பனைக்கு வரும்.


Pengarang :