ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இன்றும் சிலாங்கூரில் கடும் மழை என கணிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், டிச.19: தலைநகர் பேராக், பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அதிகாலை 1.40 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை எச்சரிக்கை அறிக்கையின் மூலம் சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், சிப்பாங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களிலும், பேராவில் மஞ்சோங், கிந்தா, மத்திய பேராக், கம்பார், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் மாவட்டங்களிலும் கடும் மழைக்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகாங்கில், கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், மற்றும் குவாந்தான் ஆகிய பகுதிகளிலும் அதே நிலை  எதிர்பார்க்கப் படுகிறது,

இதற்கிடையில், கெடாவில் உள்ள கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாருவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

 

 


Pengarang :