ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திடீர் வெள்ளத்திற்கு கிள்ளான் கேட் அணை நீர் திறந்து விடப்பட்டதும் ஒரு காரணமா? மக்கள் கேள்வி?

ஷா ஆலாம், டிச 19: உலு கிள்ளானில் உள்ள கிள்ளான் கேட் அணையில் இருந்து தண்ணீர் திறந்து  விடப்படுவதால் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தயாராக இருப்பதாக பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக், அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD), மெலாவதி காவல் நிலையம், உலு கிள்ளான் காவல் நிலையம் மற்றும் அம்பாங் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மற்றும் 32 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நிலைமையைக் கண்காணித்து வருவதாக கூறினார்.

“எந்தவொரு சூழ்நிலையையும் கையாள்வதில் அனைவரும் ஈடுபடுவார்கள், குறிப்பாக தாமன் மெலாவதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில்,” என்று அவர் கூறினார். தற்போது வரை அணையில் உள்ள மொத்த நீரில் 25 சதவீதம் தண்ணீர் கட்டம் கட்டமாக திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேற்றிரவு 11.50 மணியளவில் நீர் திறப்புக்கான முதல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக மொஹமட் பாரூக் தெரிவித்தார். அணை நீர் திறப்பு நடைமுறைகளின்படி கவனமாக மேற்கொள்ளப்பட்டது என்றார்.

தெளிவாக, அனைத்து அதிகாரிகளும் உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு உதவப் பணியமர்த்தப் படுவார்கள். “பேரழிவு காரணமாக சேதமடையக்கூடிய முக்கியமான ஆவணங்கள் மற்றும் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில்,  மக்கள் மற்றும்  அவர்களின் குடும்பத்தின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை” என்று அவர் விளக்கினார்.

 


Pengarang :