ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

கோலா சிலாங்கூல் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 8 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், டிசம்பர் 20 – இன்று காலை 10.35 மணி நிலவரப்படி, கோலா சிலாங்கூரைச் சுற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குவதற்கு மொத்தம் எட்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.கோலா சிலாங்கூர் மாவட்டம் மற்றும் நில அலுவலகம் மற்ற அமைப்புகளுடன் இணைந்து  மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோ அமிருடின் ஷாரி கூறினார்.

“கோலா சிலாங்கூர் பகுதியில் இதுவரை நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் காட்டுகிறது, எட்டு வெளியேற்றும் மையங்கள் திறக்கப் பட்டுள்ளன,” என்று அவர் இன்று ட்விட்டரில் தெரிவித்தார். இதற்கிடையில், புக்கிட் மெலாவதி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்கிஃப்லி ட்விட்டரில் கூறுகையில், மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காலை 11.35 மணி நிலவரப்படி 2,000 பேரை எட்டியுள்ளது.

கம்போங் தஞ்சோங் சியாம், கம்போங் அசாஹான் மற்றும் கம்போங் புக்கிட் கூச்சிங்கின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், தற்போது மக்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஜுவைரியா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 03-3289 7632 என்ற எண்ணில் உதவிக்கு கோலா சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலக பேரிடர் செயல்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :