ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 3,519 ஆகப் பதிவு

கோலாலம்பூர், டிச 23- நாட்டில் தினசரி கோவிட் -19  நோய் தொற்று எண்ணிக்கை கடந்த  இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

நேற்று முன்தினம் 3,140 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை  நேற்று  3,519 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த திங்களன்று மொத்தம் 2,589 புதிய சம்பவங்கள் பதிவாகின என்று   கோவிட் -19 நிலவரம் தொடர்பில் வெளியிட்ட  ஒரு அறிக்கையில் அவர் குறிப்பிட்டார். 

நேற்று பதிவான சம்பவங்களில் 65  அல்லது 1.8 விழுக்காடு மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் பாதிப்பைக் கொண்டிருந்தன. எஞ்சிய 3,454 சம்பவங்கள் அல்லது  98.2  விழுக்காடு லேசான பாதிப்பைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவையாகும்.

நேற்று 5,118 பேர் நோய்த் தொற்றிலிருந்து  குணமடைந்துள்ளனர். இதன்வழி நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 587 ஆக உயர்ந்துள்ளது. 

நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் 331  பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 187 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாக நோர் ஹிஷாம்  கூறினார்.

நேற்று புதிதாக  இரண்டு நோய்த் தொற்று மையங்கள் கண்டறியப்பட்டன. இதன் வழி தீவிரமாக உள்ள மொத்த தொற்று மையங்களின் எண்ணிக்கையை 234 ஆக உயர்ந்துள்ளது. 

Pengarang :