ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

சிலாங்கூரில் வெள்ளத்தின் போது சொத்துக்கள் களவு தொடர்பில் 13 புகார்கள்

ஷா ஆலம், டிச 25- இம்மாதம் 17 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சிலாங்கூரில் வெள்ளத்தின் போது சொத்துக்கள் களவு தொடர்பில் 13 குற்றப்பத்திரிகைகளை காவல் துறையினர் திறந்துள்ளனர்.

இத்தகைய குற்றங்கள் தொடர்பில் இதர மாநில போலீஸ் தலைமையகங்கள் எந்த புகாரையும் பெறவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் 4 நான்கு சம்பவங்களும் பேராங்காடிகள் மற்றும் கடைகளில் திருடியது தொடர்பில் 9 புகார்களும் கிடைக்கபெற்றதாக கிடைக்கப் பெற்றதாக அவர் சொன்னார்.

இக்குற்றச் செயல்கள் தொடர்பில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

பொதுமக்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்பதோடு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை காப்பதற்கு ஏதுவாக அதிகாரிகள் வெளியிடும் உத்தரவுகளை மதித்து நடக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

ஷா ஆலம், தாமான்  ஸ்ரீ மூடாவிலுள்ள மைடின் பேராங்காடியில் புகுந்து பொருள்களை கொள்ளையிட்டது தொடர்பில் 31 பேர் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :