SETIU, 1 Dis — Penduduk Kampung Nyatoh menggunakan sampan membawa barangan keperluan untuk berpindah ke Pusat Pemindahan Sementara (PPS) Kampung Nyatoh setelah kediaman mereka mula ditenggelami air hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் நிவாரண மையங்களில் தங்கியிருந்த அனைவரும் வீடு திரும்பினர்

ஷா ஆலம், ஜன 1- சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்பியதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள அனைத்து தற்காலிக நிவாரண மையங்களும் நேற்று மூடப்பட்டன.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பதிவின் வழி இத்தகவலை வெளியிட்டார்.

2021 ஆம் ஆண்டின் கடைசி நிமிடமான 11.59 மணிக்கு சிலாங்கூரிலுள்ள அனைத்து துயர் துடைப்பு மையங்களும் மூடப்பட்டதோடு அங்கு தங்கியிருந்த அனைவரும் வீடு திரும்பினர் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அயராது உதவிகளை வழங்கி வந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அவர் தெரிவித்தார்.

நேற்று ஐந்து துயர் துடைப்பு மையங்களில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 479 பேர் தங்கியிருந்தனர்.

 


Pengarang :