ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONALPBT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கோத்தா கெமுனிங் தொகுதி உதவி

ஷா ஆலம், டிச 2- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசினால் தொடங்கப்பட்ட பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கான விண்ணப்ப பாரங்களைச் சேகரிப்பதில் கோத்தா கெமுனிங் சட்ட மன்ற தொகுதி அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கிள்ளான் மாவட்டத்தை சம்பந்தப்படுத்திய 3,000 விண்ணப்ப பாரங்களை கடந்த வியாழக்கிழமை முதல் தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

நாங்கள் தற்போது பெட்டாலிங் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் புக்கிட் லஞ்சோங், லஞ்சோங் ஜெயா, கம்போங் பாரு ஐக்கோம், ஆலம் இண்டா ஆகிய பகுதிகளிலிருந்து விண்ணப்ப பாரங்களை சேகரித்து வருகிறோம். விண்ணப்பதாரர்களிடமிருந்து அடையாளக் கார்டு நகல், மின்சார/தண்ணீர் கட்டண பில் ஆகியவற்றை பெறும்படி கிராமத் தலைவர்கள் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

பொது மக்களின் வசதிக்காக தாமான் ஸ்ரீ மூடா செக்சன் 25, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அருகில் தற்காலிக கூடாரங்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து விண்ணப்ப பாரங்களை பெற்று வருகிறோம் என்று அவர் சொன்னார்.

ஸ்ரீ மூடா உள்பட கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 பேர் இதுவரை 1,000 வெள்ளி உதவித் தொகையை பெற்றுள்ளதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் கூறினார்.

 


Pengarang :