ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

புத்தாண்டில் விடிவெள்ளி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீ மூடா வணிகர்கள்

ஷா ஆலம், ஜன 2- கடுமையான வெள்ளம் காரணமாக கடந்த இரு வாரங்களாக வர்த்தகம் முடங்கியிருந்த நிலையில் புத்தாண்டில் விடிவெள்ளி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீ மூடா வணிகர்கள் தஙகள் கடைகளைத் திறந்து வியாபாரத்தை தொடக்கியுள்ளனர்.

வலி மிகுந்த இரண்டு வார காலத்திற்குப் பிறகு இங்குள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடக்கயுள்ளதோடு வீடுகளைத் துப்புரவு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தன்னார்வர்கள் துப்புரவுப் பணியில் பொது மக்களுக்கு உதவி வருவதையும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும பணியில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிந்தது.

இங்கு இணைய மற்றும் தொலைத் தொடர்பு சேவையும் முன்பைவிட  சிறப்பாக உள்ளது.கடந்த மாதம் 18 ஆம் தேதி பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக ஸ்ரீ மூடா விளங்குகிறது.

இங்குள்ள கார், மோட்டார் சைக்கிள் பட்டறைகள், முடி திருத்தும் நிலையங்கள், ஜவுளிக் கடைகள், சலவை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.

எனினும், பேரங்காடிகள், மளிகைக் கடைகள்  போன்ற சில வர்த்தகங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன.

Pengarang :