Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari (tengah) bergambar bersama penduduk selepas menyerahkan sumbangan ketika meninjau keadaan selepas banjir di Taman Maznah, Klang pada 25 Disember 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட் 3,721 குடும்பத்தினர் வெ. 1,000 உதவித் தொகையைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 2- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் எனும் மாநில அரசின் எழுச்சி உதவித் திட்டத்திற்காக இதுவரை 37 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 3,721 குடும்பங்கள் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, வெள்ளத்திற்கு பலியான இருவரின் குடும்பங்களுக்கு தலா 10,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டதாக தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னர் மாநிலத்தை உலுக்கிய கடுமையான வெள்ளச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 10 கோடி வெள்ளி நிதியில் இக்தியார் பங்கிட் சிலாங்கூர் திட்டத்தை மாநில அரசு தொடக்கியது

வெள்ளத்தினால் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கும் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 1,000 வெள்ளியும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் இந்த சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

வெள்ளத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அல்லது தனியார் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்கள் மற்றும்  வீட்டிலேயே தங்கியிருந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.


Pengarang :