Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari mendegar luahan mangsa banjir ketika meninjau kawasan terkesan banjir di Kampung Sungai Lui, Hulu Langat pada 29 Disember 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6,913 குடும்பத்தினர் வெ. 1,000 உதவித் தொகை பெற்றனர்

ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சி உதவித் திட்டத்தின் வழி நேற்று வரை 69 லட்சத்து 69 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6,913 பேர் 1,000 வெள்ளி வெள்ள நிவராண உதவித் தொகையைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர, வெள்ளத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த இரு குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி நிதியில் சிலாங்கூர் பங்கித் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக மந்திரி புசார் கடந்த மாதம் 21 ஆம் தேதி கூறியிருந்தார்.

வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சீரமைப்பது, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10,000 வெள்ளி மற்றும் பொருள் சேதம் அடைந்தவர்களுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.


Pengarang :