ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம்-மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் 100 குடும்பங்களுக்கு உதவிப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 3- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் அசாகானைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பினர் மூலம் அடிப்படை வீட்டுப் பொருள்கள் விநியோகிக்கப்   பட்டதாக புக்கிட் மெலாவத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

சமையல் எரிவாயு அடுப்புகள், ரைஸ் குக்கர் உள்ளிட்ட பொருள்கள் கடந்த மாதம் 30 ஆம் தேதி வழங்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

கடந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் சுமையைக் குறைப்பதில் இந்த உதவிப் பொருள்கள் ஓரளவு துணை புரியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பொருள்கள் யாவும் தொகுதி சேவை மையம் மூலம் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப் பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் தற்போது வீடு திரும்பி துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஜூவாய்ரியா குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் குழு, டீம் சிலாங்கூர் அமைப்பு மற்றும் தொகுதி சேவை மைய உறுப்பினர்களை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :