ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

லங்காட் ஆற்றில் நீர் மட்டம் அபாய அளவை எட்டியது

ஷா ஆலம் ஜன 3 - இன்று காலை 10.30 மணி நிலவரப்படி கோல லங்காட்டின் புக்கிட் சாங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை (சிவப்பு) தாண்டி 4.34 மீட்டராக பதிவானது.

அப்பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஆற்றின் இயல்பான அளவான  4.20 மீட்டரை விட  0.14 மீட்டர் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை publicinfobanjir.water.gov.my என்ற அகப்பக்கம் வெளியிட்ட தகவல்கள் காட்டுகின்றன.

இதனிடையே, சிப்பாங், டிங்கிலில் உள்ள சுங்கை லங்காட் ஆற்றில் நீர்மட்டம் 0.28 மீட்டர் அதிகரித்து 6.68 மீட்டர் எச்சரிக்கை அளவில் இருந்தது. மழையின் காரணமாகவும் இப்பகுதியில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வெள்ள நிலவரங்கள்  குறித்த சமீபத்திய தகவல்களை publicinfobanjir.water.gov.my என்ற இணையதளத்தளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் .


Pengarang :