ANTARABANGSAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்-மந்திரி புசார் அறிவுறுத்து

ஷா ஆலம், ஜன 5- புத்தாண்டு பிறந்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில்  கோவிட்-19 தொற்று குறித்து விழிப்புடன் இருக்குமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

நாம் 2022 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும்போது, ​​கோவிட்-19 நோய்த் தொற்று குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  TRIIS எனப்படும்  சோதனை, அறிக்கை, தனிமைப்படுத்தல், தகவல் மற்றும் தேடுதல் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.)  எப்போதும் கடைபிடிப்போம். கோவிட் -10 நோய்த் தொற்று  பரவலை நாம் ஒன்றாகக் கட்டுப்படுத்துவோம் என்று அவர் இன்று தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

TRIIS பற்றிய விளக்கப்பட வழிகாட்டியையும் மந்திரி புசார் தனது இடுகையில் பகிர்ந்துள்ளார்


Pengarang :