Keadaan kawasan perkampungan dan laluan ke Kampung Sungai Lui ditutup ekoran terdapat rekahan selepas dilanda banjir ketika tinjauan Media Selangor di Hulu Langat pada 21 Disember 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோல சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்ளை இலவசமாக பரிசோதிக்கலாம்

ஷா ஆலம், ஜன 5- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாகனங்களை இலவசமாக பரிசோதிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் சேவையை எஸ்.டி.டி.சி. எனப்படும் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் வழங்குகிறது.

இச்சேவையின் போது வாகனங்களின் இயந்திரம், பயணிகள் இருக்கை, மசகு எண்ணெய், கியர் பெட்டி, பிரேக் எண்ணெய், ஸ்டீயரிங் மற்றும் மின்னியல் சாதனங்களின் செயல்பாடுகள் சோதிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வாகனங்களுக்கான அடிப்படை செர்வீஸ் சேவையையும் வழங்கப்படும் எனக் கூறிய அவர், எனினும், அதற்கு தேவையான உபரி பாகங்களை வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றார்.

எஸ்.டி.டி.சியின் இந்த சேவை மிகவும் பயன்மிக்கது என்பதோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையையையும் குறைக்க க்கூடியது என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு இந்த சேவை கோல சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஷா ஆலம் மாநகர் மன்றத்துடன் இணைந்து வெள்ளத்தில் சேதமடைந்த மின்சாரப் பொருள்களை பழுதுபார்க்கும் சேவையை இந்த மையம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :