ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆடைகள்

ஷா ஆலம் 7 ஜன :-   கோத்தா கெமுனிங்  சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு  உறுப்பினருமான வீ. கணபதிராவ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க , வரும்   சனிக்கிழமை 08/01/2022 அன்று நேரம் பிற்பகல் 12.00 முதல் மாலை 6.00 மணிவரை மற்றும் ஞாயிறு  காலை 9.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஷா ஆலாம் ஸ்ரீ  மூடா  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இலவச ஆடைகள் வழங்கும் நிகழ்வில் அனைவரும் வந்து கலந்து கொள்ள அழைக்கிறார்கள்.

பல அரசு சாரா இயக்கங்கள் இணைந்து வழங்கும் இந்த நிகழ்வில், புதிய மற்றும் பயன்படுத்திய ஆடைகள் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஆயிரக்கணக்கான ஆடைகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை ஏற்பாட்டாளர் J.சங்கீதா தெரிவித்தார்.

சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த இலவச ஆடை சந்தையில் கலந்து கொண்டு, வேண்டிய ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள அழைக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்


Pengarang :